ETV Bharat / bharat

‘ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான அளவு உள்ளது - புதுச்சேரி துணை நிலை ஆளுனர் - துணை நிலை ஆளுநர்

புதுச்சேரி: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் உட்பட அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் போதுமான அளவு உள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

துணை நிலை ஆளுநர்
‘ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான வகையில் கையிருப்பு உள்ளது பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்’
author img

By

Published : Apr 18, 2021, 10:14 PM IST

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் துணை நிலை ஆளுநர் உத்தரவின்படி சுகாதரத்துறை சிறப்பு முகாம்களை நடத்தி வருகி்றது.

இந்நிலையில், நேருவீதியிலுள்ள பெரிய (குபேர்) மார்க்கெட்டில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

‘ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான வகையில் கையிருப்பு உள்ளது பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்’

அதில் “புதுச்சேரி மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் போதுமான வகையில் கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். மேலும் பொது முடக்கம் போடக்கூடிய அளவில் இல்லை, இருப்பினும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். தேவை ஏற்பட்டால் பகுதி முடக்கம் போடவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். உயிர்காக்கும் மருந்துகள் இல்லை என வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: துபாயில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 504 கிராம் தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.