புதுச்சேரி: பாரதி பூங்காவிலுள்ள கவிஞர் பாரதிதாசன் சிலை பராமரிப்பின்றி இருப்பதாகவும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை, அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முன்னதாக மனு அளித்திருந்தது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று (ஏப்.15) துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாரதி பூங்காவிலுள்ள பாரதிதாசன் சிலை வளாகத்திற்கு அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உடைந்த நிலையிலிருந்த சிமெண்ட் கற்கள் உள்ளிட்டவற்றை மாற்றும்படி பொதுத் துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியை முறையாக தூய்மைப்படுத்தி செடி வகைகளை நடுமாறு உள்ளாட்சித் துறை, வனத் துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் ஆளுநரின் ஆலோசகர்களான சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வேதாரண்யம் அருகே மீன் வலையில் சிக்கிய விநாயகர் சிலை!