குஜராத்: தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்த ஓர் கும்பல் மடிக்கணினி, அலைப்பேசி போன்றவற்றை வடோடரா நகரத்திலுள்ள வீடுகளில் திருடி வந்துள்ளனர். இதைக் கண்டறிந்த வடோடரா மாவட்ட காவல்துறையினர் இக்கும்பலைத் தேடிய போலீசார் இன்று (அக்.20) அவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த சுமார் ரூ.4.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, இந்தக் கும்பல் குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததும் அவர்களை வடோடராவில் வைத்துப் பிடித்தனர். பிடிபட்ட அந்தக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்ததோடு, இவர்கள் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பன போன்ற பலகோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சுகதேவ் சிங் ரந்தேவ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த நான்கு பேரை கைது செய்து தெரியவந்தது. மேலும், கடந்த 15 நாட்களாக இந்த ஊரில் திருடி வருவதும், செல்வந்தர்கள் வசிக்கும் பகுதிகளிலே திருடி வருவதும் தெரியவந்தது. அவர்களிடத்திலிருந்து 9 மடிக்கணினிகள், 25 செல்போன்கள், 6 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தனது ஐந்து குடும்பத்தாரை தீயிட்டுக் கொளுத்திய நபர் தானும் தற்கொலை..!