ETV Bharat / bharat

குருவாயூர் கோயிலுக்கு தங்க கிரீடத்தை நன்கொடை அளித்த துர்கா ஸ்டாலின்.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கேரள மாநிலம் குருவாயூர் கோயிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 10, 2023, 6:38 PM IST

திருச்சூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குக் கோயிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான 32 சவரன் தங்கக் கிரீடத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என கன்னியாகுமரி முதல் காசி வரை பல்வேறு கோயில்களுக்குச் சென்று கடும் விரதம் இருந்து பல சிறப்புப் பூஜைகளைச் செய்துள்ளார்.

இந்த நிலையில், கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு நேற்று(09.08.2023) காலை 11:35 மணிக்குச் சென்ற துர்கா ஸ்டாலின், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 32 சவரன் தங்கக் கிரீடம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் செய்ய சந்தனம் அரைக்கும் இயந்திரம் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கினார். மேலும், துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் மூலவருக்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.

துர்கா ஸ்டாலின் நன்கொடையாக வழங்கிய தங்க கிரீடம்

இதையும் படிங்க: "நம்பிக்கையில்லா தீர்மானம் பாஜகவுக்கு வரப்பிரசாதம்..." - பிரதமர் மோடி!

இந்த நிகழ்வின் போது, குருவாயூர் கோயில் முக்கிய நிர்வாகிகள், சந்தனம் அரைக்கும் இயந்திரத்தை வடிவமைத்த திருச்சூர் கே.எம்.சத்யன் இன்ஜினியரிங் உரிமையாளர் கே.எம்.ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய தங்கக் கிரீடத்தைக் கோவையைச் சேர்ந்த பிரபல நகைகள் தயாரிக்கும் நபரான சிவஞானம் என்பவர் வடிவமைத்துள்ளார். முன்னதாக அவர் குருவாயூர் கோயிலுக்குச் சென்று கோயில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு, கிரீடம் அளவு குறித்துக் கேட்டறிந்து மிகவும் துல்லியமாகக் கிரீடத்தை வடிவமைத்துள்ளார்.

குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு துர்கா ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை சென்று தரிசனம் செய்துள்ள நிலையில், இம்முறை கோயிலுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தங்க கிரீடம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்.எல்.சி விவகாரம்: தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.