ETV Bharat / bharat

ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை - இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சகாய்

ஆப்கனை கைப்பற்றிய தாலிபன்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்துள்ளதாக இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சகாய் தெரிவித்தார்.

Ajay Sahai, Director General (DG) of Federation of Indian Export Organisation

author img

By

Published : Aug 19, 2021, 2:23 PM IST

டெல்லி: அமெரிக்க ராணுவத்தினர் ஆப்கன் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியதிலிருந்தே தாலிபன்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. வெறும் 10 நாள்களில் தாலிபன்கள் தாக்குதல் நடத்தி ஆப்கனை கைப்பற்றிவிட்டனர். அந்த வகையில், ஆகஸ்ட் 15ஆம் அதிபர் மாளிகை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

அதற்கு முன்னதாகவே, அப்போதைய அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து, தாலிபன்கள் ஆட்சிக்கு அதிருப்தி தெரிவித்து ஆப்கன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துவருகின்றனர். அதனடிப்படையில் பல்வேறு நாடுகள், ராணுவ விமானங்கள் மூலம் தங்களது நாட்டு மக்களை மீட்டுவருகின்றனர்.

சில நாடுகள் ஆப்கன் மக்களுக்கும் அடைக்கலம் அளிக்க முன்வந்துள்ளன. குறிப்பாக, இந்தியா இ-எமர்ஜென்சி விசாவை (அவசர நுழைவுஇசைவு) அறிமுகப்படுத்தி இந்திய, ஆப்கன் மக்களை மீட்க முன்வந்துள்ளது. இதனிடையே தாலிபன்கள் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆப்கன் செல்லும் ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்தை தடைசெய்துள்ளனர்.

ஆப்கன்-இந்தியா இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சகாய், "ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்நாட்டிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியா வரும் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். அதனால், இந்தியாவிலிருத்தும் எவ்வித ஏற்றுமதியும் ஆப்கன் செல்லவில்லை.

இந்தியா-ஆப்கன் இடையே நீண்ட காலமாக ஏற்றுமதி, இறக்குமதிக்கு வர்த்தகம் நடைபெற்றுவந்துள்ளது. ஆப்கனில் இந்தியாவிற்கு அதிக முதலீடுகள் உள்ளன. குறிப்பாக, ஆப்கனில் உள்ள மிகப்பெரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்று. அப்படி அந்நாட்டில் 400க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு ரூ.22 ஆயிரம் கோடியாகும். 2021ஆம் ஆண்டினுடைய வர்த்தக முதலீட்டு மதிப்பு 6 ஆயிரத்து 300 கோடி ரூபாயாகும்.

இந்த வர்த்தகத்தில், சர்க்கரை, மருந்துகள், ஆடை, டீ தூள், காபி தூள், மசாலாப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படும். அங்கிருந்து, உலர் பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பண மூட்டைகளுடன் தப்பி சென்றேனா? அஷ்ரப் கானி ஆதங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.