கரோனா இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமெடுத்துள்ள நிலையில், தைவான் இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், 500 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளது.
இரண்டாவது தொகுப்பு மருத்துவ உபகரணங்கள் விரைவில் இந்தியாவுக்கு விமானம் மூலம் அனுப்பப்படும் என தைவான் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அந்நாட்டு அரசு, தைவான் இந்திய மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை வழங்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் இந்தியாவின் நிலைமை (கரோனா பாதிப்பு) குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். இந்தக் கடினமான நேரத்தில் தைவான் இந்தியாவுடன் நிற்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.