ETV Bharat / bharat

குடும்பத்தகராறு... இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை...

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், பெற்ற தந்தையே தனது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Suspicious
Suspicious
author img

By

Published : Aug 18, 2022, 9:47 PM IST

கோடேரு: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், குடிகில்லா பகுதியைச் சேர்ந்த ஓம்கார் என்பவர், மூன்றாவதாக மகேஸ்வரி என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சந்தனா (3) மற்றும் விஸ்வநாத் (1) என இரு குழந்தைகள் இருந்தனர்.

மனைவி மகேஸ்வரி மீது ஓம்காருக்கு சந்தேகம் இருந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய ஓம்கார், மனைவியையும், குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளார்.

செல்லும் வழியில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஓம்கார் மிரட்டியதால் அச்சமடைந்த மகேஸ்வரி இருசக்கர வாகனத்திலிருந்து குதித்து தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

பிறகு தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரி அளித்த தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தனர். குழந்தைகளைக் கண்ட மகேஸ்வரி கதறி அழுதார். இதையடுத்து குழந்தைகளின் சடலங்களை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தை ஓம்கார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவன் மீது சரமாரி தாக்குதல்... வீடியோ வைரல்... போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.