ETV Bharat / bharat

ரூ.2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு..? - எம்.பி. மோடி வைத்த கோரிக்கை - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கருப்பு பண பதுக்கல், சட்டவிரோதப் பண பரிமாற்றம், ஆயுத கொள்முதல், உள்ளிட்ட செயல்களுக்கு வழிவகை செய்வதாகவும், 2 ஆண்டு கால அவகாசத்தில் மக்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பா.ஜ.க. எம்.பி. சுஷில் குமார் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுஷில் குமார் மோடி
சுஷில் குமார் மோடி
author img

By

Published : Dec 12, 2022, 5:37 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 29ஆம் தேதி வரை குளிர் கால கூட்டத் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரின் பூஜ்ய நேர கேள்வி நேரத்தில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் சுஷில் குமார் மோடி, நாட்டில் படிப்படியாக 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க கோரிக்கை வைத்தார்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாமல் செய்து அடுத்த 2 ஆண்டுகளில் வங்கிகளில் பொது மக்கள் டெபாசிட் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என சுஷில் குமார் மோடி கூறினார்.

மேலும் அவர், நாட்டில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதில்லை என்றும், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு நோட்டுகளைக் கூட ரிசர்வ் வங்கி அச்சடிக்காததால், மத்திய அரசு தலையீட்டு விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இரவோடு இரவாக செல்லாது என அறிவிக்கப்பட்டு புதிய 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பல்வேறு காரணங்களுக்காக பழைய ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து மறைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இல்லாததற்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என பா.ஜ.க. எம்.பி. தெரிவித்தார்.

சட்டவிரோத பணப் பரிமாற்றம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கொள்முதல், கருப்புப் பணம் பதுக்கல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வழிவகை செய்வதாக சுஷில் குமார் மோடி தெரிவித்தார். எனவே, பொது மக்களிடம் இருந்து 2 ஆண்டுகள் கால அவகாச இடைவெளியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.