சூரத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சூரத் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி சமூத்தினர் குறித்து ராகுல் காந்தி அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்தாக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23ஆம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. அதேபோல 30 நாட்கள் ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை தடை செய்யவும், வழக்கில் இருந்து விடுவிக்கவும் கோரினார். முன்னதாக சூரத் நீதிமன்றம் வழங்கி உத்தரவில், ராகுல் காந்தியின் ஜாமீன் ஏப்ரல் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அன்று மீண்டும் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. தந்தை கொடுத்த பகீர் வாக்குமூலம்..