ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்: குழு அமைத்திட உச்ச நீதிமன்றம் தயார்!

டெல்லி: வேளாண் சட்டம் விவகாரத்தில், மத்திய அரசு விவசாயிகளுடன் கலந்துரையாட நாங்கள் குழு அமைக்க தயாராக உள்ளோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார்.

டெல்லி
டெல்லி
author img

By

Published : Jan 11, 2021, 8:21 PM IST

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 40 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், விவசாயிகள் போராட்டத்துக்கு தடை கோரும் மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, " வேளாண் சட்டங்களை நிறைவேற்றி தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார். போராட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. முடிவுக்கு கொண்டு வருவது அனைவரின் கடமையாகும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக, விவசாயிகளுடன் பேச குழு அமைக்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம். அந்த குழுவிடம், விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கட்டும். குழுவின் பரிந்துரையை ஆராய்ந்து நாம் முடிவுகளை எடுக்கலாம். மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்காவிட்டால், உச்ச நீதிமன்றமே நிறுத்தி வைக்க நேரிடும்" எனத் தெரிவித்தார்

மேலும், நாளை உச்ச நீதிமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. சட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.