ETV Bharat / bharat

Breaking News: விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - Lekshmana Chandra Victoria Gowri

விக்டோரியா கெளரிக்கு எதிரான வழக்கை சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 7, 2023, 11:02 AM IST

Updated : Feb 7, 2023, 11:11 AM IST

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ள விக்டோரியா கெளரி சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர், அவரது வெறுப்பு பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதால் அவரது நீதிபதி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், விக்டோரியா கெளரி அரசியல் பின்புலம் கொண்டவர், அவரது வெறுப்பு பேச்சு சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. எனவே அவரை நீதிபதியாக பதவியேற்க அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.

அதன் பின்னர், பேசிய நீதிபதி கவாய், நான் கூட கல்லூரி காலங்களில் அரசியல் அமைப்பில் இருந்துள்ளேன். ஆனால் நீதிபதியாக பதவியேற்ற பிறகு எனது செயல்பாடு அவ்வாறாக இருந்தது இல்லை என்றார்.

அதன் பின்னர், பேசிய ராஜூ ராமச்சந்திரன், அவர் அரசியல் பின்புலம் கொண்டவர் மட்டும் பிரச்சனை இல்லை அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து கூறியது தான் பிரச்சனை என்றார். ஒருவரது முன்காலத்தை வைத்து நிகழ்காலத்தை பற்றி தவறாக எப்படி கணிக்க முடியும் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனிடையே, 10.35 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விக்டோரியா கெளரி கூடுதல் நீதிபதியாக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Feb 7, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.