நாட்டின் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்பான பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. அதன் விசரணைையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு இன்று(ஏப்.23) விசாரித்தது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். நாட்டின் ஆக்ஸிஜன் உற்பத்தி, விநியோக நிலவரம் குறித்து நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். வாதத்தை கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் அனைத்து குடிமக்களின் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மத்திய அரசு மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகளை வரும் 27ஆம் தேதி கூற வேண்டும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஒரே தேசமாக செயல்பட்டால் தட்டுப்பாடு நிலவாது பிரதமர் மோடி