ETV Bharat / bharat

பாஜக எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி வேண்டும்: கட்சியினர் ஆர்ப்பாட்டம் - பாஜக வேட்பாளர் ஜான் குமார்

புதுச்சேரி பாஜக எம்.எல்,ஏ ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவாளர்கள் கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி கேட்டு ஆதரவாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்

author img

By

Published : Jun 21, 2021, 7:22 PM IST

Updated : Jun 21, 2021, 9:42 PM IST

புதுச்சேரியில் பாஜக சார்பில் சபாநாயகர் பதவி மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டது. இதில் புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். பாஜக சார்பில் எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம், ஜான் குமார் ஆகியோருக்கு அமைச்சர் பதவிக்கு பெயர் பரிந்துரைக்கப்பட்டு, பதவி அளிக்கப்பட்டது.

நீக்கப்பட்ட பெயர்

ஆனால், தொடர்ந்து பட்டியலிலிருந்து ஜான்குமார் பெயர் நீக்கப்பட்டு, அக்கட்சியைச் சேர்ந்த சாய் சரவணன் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஜான் குமார் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகத்தில் கடந்த வாரம் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதரவாளர்கள் போராட்டம்

இந்நிலையில் இன்று (ஜூன்.21) ஜான் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி, காமராஜர் நகர் தொகுதி ஆதரவாளர்கள் புதுச்சேரி காமராஜ் சாலை அருகே கறுப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Last Updated : Jun 21, 2021, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.