ETV Bharat / bharat

RajiniKanth: மகிழ்ச்சியாக இருக்கிறது! - திடீர் ட்வீட்டால் ரசிகர்கள் குஷி! - Jailer movie casting

தனது சகோதரரின் 80வது பிறந்த நாள் மற்றும் அவரது மகனின் மணி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

RajiniKanth
RajiniKanth
author img

By

Published : Feb 20, 2023, 6:50 AM IST

கர்நாடகா: நடிகர் ரஜினிகாந்த், தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தின் பல்வேறு காட்சிகளில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தி வரும் ஆசிரமத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். மனைவி லதாவுடன் ஒன்றாக அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தியானம் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

இந்நிலையில் தனது அண்ணன் சத்திய நாராயணாவின் 80வது பிறந்தநாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு கலந்து கொண்டு அவரை வாழ்த்தி உள்ளார். அவருக்கு ரஜனிகாந்த் தங்க காசுகாளால் அபிஷேகம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டர் பக்கத்தில், "எனது சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் என் குடும்பத்துடன் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பொன் இதயத்தில் தங்கத்தைப் பொழிவதை நான் பாக்கியமாக உணர்ந்தேன். இந்த நாள், கடவுளுக்கு நன்றி சொல்ல செய்தது" என்று பதிவிட்டுள்ளார்.

  • Had the happiness of celebrating the 80th birthday of my brother Sathyanarayana Rao Gaikwad and the 60th birthday of his son Ramakrishna on the same day with my family … felt blessed to shower gold on this golden heart which made me who I am today 🙏🏻 thankful to god. pic.twitter.com/s8npLIzjHG

    — Rajinikanth (@rajinikanth) February 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தனது அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு சத்தியமங்கலம் மக்கள் இரங்கல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.