ஒடிசா : 22 வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஈரான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் பூரி கடற்கரையில் பிஃபா கால்பந்து போட்டி குறித்து 8 அடி உயர மணற்சிற்பத்தை பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக்,உருவாக்கி உள்ளார். போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவர் இதனை வடிவமைத்துள்ளார்.
ஐந்து டன் மணலை பயன்படுத்தி இதனை அவர் உருவாக்கியுள்ளார். மேலும் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் நாணயங்களையும் அவர் அதில் பயன்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : 2022 ஃபிபா கால்பந்து தொடர் - கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் இன்று தொடக்கம்!