சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம், 82.68 ரூபாய் என்ற அளவுக்கு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இது இறுதியாக 82.24 ரூபாயாக முடிவடைந்தது.
இதனிடையே அமெரிக்காவில் நேற்று(அக்.15) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. மாறாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது என்றே கூறுவேன். ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. டாலர் வலுப்பெறும் சூழலில், உலகளவில் மற்ற நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாயின் மதிப்பு உறுதியாக இருக்கிறது. அந்நிய செலாவணி சந்தையில் மற்ற எல்லா நாணயங்களையும் விட சந்தை மாற்றங்களை இந்திய ரூபாய் சிறப்பாக எதிர்கொண்டுள்ளது" என்று கூறினார்.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்த நிர்மலா சீதாராமனின் இந்தப் பதிலை, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி விமர்சித்துள்ளார். நிர்மலா சீதாராமனின் கருத்தை கலாய்க்கும் வகையிலான மீம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
-
Congrats. JNU never fails pic.twitter.com/STYwkNmELn
— Subramanian Swamy (@Swamy39) October 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Congrats. JNU never fails pic.twitter.com/STYwkNmELn
— Subramanian Swamy (@Swamy39) October 16, 2022Congrats. JNU never fails pic.twitter.com/STYwkNmELn
— Subramanian Swamy (@Swamy39) October 16, 2022
அதில், 'போட்டியில் நாம் தோற்கவில்லை, எதிரணி வென்றுவிட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் "வாழ்த்துகள், ஜேஎன்யு கூறினால் தவறாகாது" என்று பதிவிட்டுள்ளார். அதன்படி, டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படித்த நிர்மலா சீதாராமனின் கருத்து தவறாகாது என்று சுப்பிரமணியசாமி கேலி செய்துள்ளார் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள் தொடங்கி வைப்பு