கொல்கத்தா: மத்திய பல்கலைக்கழகத்தின் விழாவில் கலந்துகொண்டு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அண்மையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அப்போது, ஒன்றிய கல்வியமைச்சர் பதவியைப் பெற்ற சுபாஷ் சர்க்கார், முதல் பொது நிகழ்ச்சியாக மத்தியப் பல்கலைக்கழக விழாவில் நேற்று கலந்துகொண்டார்.
டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள் கல்வியைப் பெறுவதில் உள்ள சிக்கல், இந்திய கல்வித்துறை உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் குறித்து பேசுவதற்கு இருந்தாலும், தாகூரின் நிறம் குறித்து அவர் பேசினார்.
"தாகூரின் குடும்பத்தில் அனைவரும் மாநிறம் கொண்டவர்கள். ரவீந்திரநாத் மட்டும் கறுப்பானவர். அதனால், அவரது தாயார், அவரது உறவினர்கள் தாகூரை அரவணைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.
தாகூரின் குடும்பத்தைச் சேர்ந்த சுப்ரியா தாகூர், ரவீந்திரநாத் தாகூரின் நிறம் கறுப்பானதுதான், அதற்கு பின் பல இனிய கதைகள் உள்ளன. ஆனால், தாகூரின் நிறத்திற்காகவே அவரது தாயார் தாகூரை அரவணைக்க மறுத்ததாக பாஜக அமைச்சர் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது" என கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க: ’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங்