ETV Bharat / bharat

மொழிவாரியாக பிரிவினை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா?

author img

By

Published : Jan 20, 2021, 2:13 PM IST

இந்தியா போன்ற அதிக அளவிலான வேறுபட்ட குழுக்களைக் கொண்ட சமூகங்களை கட்டமைத்து, ஒரே தேசமாக உருவெடுக்க செய்வது மிக சவாலான காரியம் என்று, அரசியல் ஆய்வாளரான பெனடிக்ட் ஆண்டர்சன் தனது இமேஜிண்ட் கம்யூனிடீஸ் தத்துவத்தில் குறிப்பிட்டுள்ளார். கலாசாரம், பண்பாடு, வரலாற்றுப் பின்னணியில் வேறுபட்டு நிற்கும் சமூகங்களிடையே ஒற்றுமையை விதைத்து, நூல் பிடித்தாற்போல பொதுமையான பண்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஒரு தேசத்தை கட்டமைப்பது சாதாரண காரியமல்ல. அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sub-nationalism
மொழிவாரி மாநிலங்கள்

நமது நாட்டின் மிகப்பெரிய பலம், வேற்றுமையில் ஒற்றுமை. பல்வேறு மொழிவாரி மாநிலங்கள் இருந்தாலும் அவை தங்களுக்கான அடையாளத்தை உறுதியாக பின்பற்றினாலும், தேசத்தின் நலனுக்காக அனைத்து மாநிலங்களும் ஒற்றுமை காத்து வருகின்றன.

மொழிவாரி மாநிலங்களின் எல்லைகளை வரையறுக்கும் போது, பல்வேறு மொழி இனக்குழுக்களை கொண்ட பகுதிகள் அருகாமையில் உள்ள மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. மொழிவாரியாக இணைக்கப்பட்ட மாநிலங்களுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும், அந்தந்த மாநில நிர்வாகங்களின் படி மொழிவாரி சிறுபான்மையினர் ஆக கருதப்பட்டு அவர்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன.

ஆயினும் தற்போது வரலாறு திரும்பியது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பு இருந்த மொழி வாரியான பகுதிகளுக்குள் ஏற்பட்ட பிணக்குகள், மீண்டும் ஏற்பட்டு ஒரே தேசம், ஒற்றுமையான இந்தியா என்ற கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மராத்தியர்கள் அதிகம் வசிப்பதால் பெலகாவி பகுதி, மகாராஷ்டிரா உடன் இணைக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பீட் செய்த விவகாரம், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த நிலைப்பாடு கர்நாடகாவில் கொந்தளிப்பையும் உருவாக்க தவறவில்லை. கர்நாடகாவின் ஒரு மாவட்டமாக இணைந்திருக்கும் பெலகாவியில் செயல்படும் மகாராஷ்டிரா ஏக்கி காரன் சமிதி அமைப்பினர் கிளப்பி வரும் சர்ச்சைகளால், கர்நாடகாவில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தை தங்கள் வசம் உறுதியாக பிடித்து வைத்துக்கொள்ள, கர்நாடகாவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறவில்லை.

அங்கு இரண்டாவது சட்டசபை கட்டிடத்தை எழுப்பவும், மிக முக்கிய நகரமாக பெலகாவியை மாற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி தேர்தலில் மகாராஷ்ட்ரா ஏக்கிகாரன் சமிதி கட்சியினருக்கும் கன்னட அமைப்பினருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், உத்தவ் தாக்கரேயின் நிலைப்பாடு பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது. இவரது ட்வீட் வெளிவந்ததை அடுத்து, சிவசேனா கட்சியினர் பெலகாவியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அம்மாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று போராட தொடங்கிவிட்டனர்.

மொழி ஆதிக்கம் மற்றும் ஹிந்துத்துவா கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால், சிவசேனா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு, போராட்ட களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இறங்கும். கர்நாடகாவும் இந்த விஷயத்தில் எந்த அளவிலும் குறைந்த மாநிலம் அல்ல. இனப்பற்றும் மொழிப்பற்றும் அதிகம் கொண்ட அதிக அளவிலான அமைப்புகள், அங்கு வீரியத்துடன் செயல்பட்டு வருகின்றன. மொழிவாரி கொள்கையில் உறுதியுடன் இருக்கும் இந்த இரு மாநிலங்களும், ஒரு மாவட்டத்தை தங்களுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவதால் பல்வேறு கலவரங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போதுள்ள மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் அனைத்தும், சீரான, அதிக அளவிலான மொழி குழுக்களை மட்டும் வைத்துக்கொண்டு வரையறுக்கப்படவில்லை. ஒருவேளை பெலகாவியை உரிமை கோரும் மகாராஷ்டிராவின் கோரிக்கை ஏற்கப்பட்டால், அதன் பின் உரிமை கோரல்கள் இன்னும் வீரியமாகும். அதிக அளவில் மராத்தி மொழியை பேசும் கோவா மாநிலத்தையும் மகாராஷ்ட்ரா உரிமை கோரும். அடுத்து கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தை கர்நாடகா உரிமை கோரும்.

இதேபோல திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை, குறிப்பாக மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை கேரளாவும் உரிமை கோரும். ஏனெனில் இப்பகுதிகளில் மலையாள ஆதிக்கம் மற்றும் வரலாற்றுப் பின்னணி அதிகமாக இருந்துள்ளது.

இந்தியா போன்ற அதிக அளவிலான வேறுபட்ட குழுக்களைக் கொண்ட சமூகங்களை கட்டமைத்து, ஒரே தேசமாக உருவெடுக்க செய்வது மிகச் சவாலான காரியம் என்று, அரசியல் ஆய்வாளரான பெனடிக்ட் ஆண்டர்சன் தனது இமேஜிண்ட் கம்யூனிடீஸ் தத்துவத்தில் குறிப்பிட்டுள்ளார். கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றுப் பின்னணியில் வேறுபட்டு நிற்கும் சமூகங்களிடையே ஒற்றுமையை விதைத்து, நூல் பிடித்தாற் போல பொதுமையான பண்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் ஒரு தேசத்தை கட்டமைப்பது சாதாரண காரியமல்ல.

அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக ஏராளமான மொழிவாரி இனக்குழுக்களை கொண்ட இந்தியாவில், வேற்றுமையில் ஒற்றுமை காணும் விதமாக மாநிலங்களை வரையறுப்பதில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மொழிவாரி அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் நாட்டில் பல்கிப்பெருகி உள்ளனர் . அதேநேரம் சிறு சிறு நகரங்கள் பெரு நகரங்களாக உருவெடுக்கும் போது, பல்வேறு பண்பாடு மொழி பின்னணியைக் கொண்ட மக்கள் ஒருசேர ஒன்றிணைந்து செயல்படக் கூடிய சூழல் உருவாகும். இதன்மூலம் உத்தவ் தாக்கரே முன்வைக்கும் குறுகிய மொழிவாரி அரசியல் எளிதாக தவிர்க்கப்படும்.

ஆயினும் மாநிலங்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மொழிவாரி சிறுபான்மையினரின் நலன் காக்க, அவர்களுக்கான உரிமைகளை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் மொழிவாரி அரசியலை தவிர்க்கலாம். அதேநேரம் பெரும்பான்மை மொழிவாரி குழுக்களின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மாநிலங்களுக்குள் சீரான நிலைத்த ஒற்றுமை ஓங்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.