காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சைனி தர்வான் பகுதியில், அரசுப்பள்ளி மாணவர்கள் கோழிப்பண்ணையில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். இது தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அல்ல, பொதுத்தேர்வு எழுதவுள்ள உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்குத்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் கல்வி பயிலும் அந்த கோழிப்பண்ணை இடத்தில், வகுப்பறைகள், கழிப்பறைகள் என அடிப்படையான எதுவும் இல்லை. பெரும்பாலான வகுப்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். இதனால், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் எனப் பெற்றோர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பள்ளிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு புதிய பள்ளிக்கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், பள்ளிக்கட்டப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்கு அரசு அறிவித்தபடி இழப்பீடு வழங்காததால், உரிமையாளர் பள்ளியை மூடிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, இதுதொடர்பாக உயர் அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்"