ETV Bharat / bharat

மாணவிகளின் கழிப்பறைக்குள் வீடியோ எடுத்த மாணவர் கைது - student recorde video ladies toilets

கர்நாடகாவில் தனியார் கல்லூரியின் கழிப்பறைக்குள் மாணவிகளை வீடியோ எடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

Student booked for recording girls in varsity toilets in Bengaluru

author img

By

Published : Nov 22, 2022, 7:58 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியின் கழிப்பறைக்குள் இளம்பெண்களை வீடியோ எடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கிரிநகர் போலீசார் தரப்பில், கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சுபம் ஆசாத் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாநிலத்தை சேர்ந்த இவர் தனது கல்லூரியின் பெண்கள் கழிப்பறைக்குள் மாணவிகளை அரைநிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதை வாடிக்கையாக வைத்துவந்தார்.

முன்னதாக, கடந்த மாதம் மாணவிகளின் கழிவறையில் வீடியோ எடுக்கும்போது சக மாணவர்களிடம் சிக்கியுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகம் கடுமையாக எச்சரித்து, மன்னிப்புக் கடிதம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல்விட்டது. ஆனால் அவர் நவம்பர் 18ஆம் தேதி மீண்டும் வீடியோ எடுத்துள்ளார். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இவரது செல்போனில் 1,200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தன. அவற்றை முற்றிலும் நீக்கும் பணி நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மஹாராஷ்டிராவில் மனைவிக்குப் பாலியல் வன்கொடுமை; கணவன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.