புதுவை: மூலக்குளத்தை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மகள் மாணவி ரித்திகா பாரதிதாசன். இவர் கடந்த மாதம் ’இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’க்காக ஆன்லைன் மூலம் 247 தமிழ் உயிர் எழுத்துக்களை பாடல் வடிவத்தில் ஒரு நிமிடம் 40 நொடிகளில் பாடி காட்டினார். இதனால் ’இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ’ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இவர் தனது சாதனை சான்றிதழுடன் புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்பொழுது 247 தமிழ் உயிர் எழுத்துக்களை பாடல் வடிவத்தில் ஒரு நிமிடம் 40 நொடிகளில் விரைவாக பாடினார்.
முதலமைச்சர் இருக்கையிலிருந்து எழுந்து வந்து மாணவியை பாராட்டினார். இந்த நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் வில்லியனூர் தொகுதி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் செந்தில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி அரசுப்பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த எம்எல்ஏக்கள் கோரிக்கை