புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ விஸ்வநாதன், விசிக அமைப்பாளர் தேவபொழிலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்பொழுது ஹெல்மெட் அணிவது சம்பந்தமாக போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிப்ரவரி 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க: 'புதிய நியமன எல்எம்ஏ பதவிக்கு பாஜகவைச் சேர்ந்தவர் நியமனம்’ - புதுச்சேரி முதலமைச்சர் கண்டனம்