ETV Bharat / bharat

‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி! - கட்டுப்படுத்தும் உத்தி!

சுனாமி போல் தாக்கும் கரோனாவின் இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற, ஊரடங்கை அமல்படுத்தும் அதே வேளையில், வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னைகளையும் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.

Strategy to tide over the Covid tsunami
‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி!
author img

By

Published : May 6, 2021, 11:02 AM IST

டெல்லியில் அதிகரித்துவரும் ஆக்சிஜன் நெருக்கடி பிரச்னை குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “நாம் இதை ‘அலை‘ என்று அழைக்கிறோம். ஆனால் உண்மையில் இது ஒரு ‘சுனாமி‘ ஆகும்“ என்று குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு, முதல் கோவிட் தொற்று ஜனவரியில் பதிவானது, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சம் ஆவதற்கு ஆறு மாதங்கள் ஆனது. ஆனால் இரண்டாவது அலை என்று அழைக்கப்படும். இப்போதைய பரவலில், ஒரு வார காலத்திற்குள்ளாகவே தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 23,800 ஆக பதிவாகியுள்ளது. அரசின் புள்ளிவிவரங்களின்படி, மார்ச் மாதத்தில் கோவிட் பாதித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 5,417 ஆக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 45,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகரித்துவரும் ஆக்சிஜன் நெருக்கடி
அதிகரித்துவரும் ஆக்சிஜன் நெருக்கடி

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு கோடியைத் தாண்டிவிட்டது. அதில் 34 லட்சம் பேருக்கு தீவிர பாதிப்பு உள்ளது. இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் ஒரு பெரிய சமூக நெருக்கடி உருவாகியிருப்பதைக் காட்டுகிறது.

குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும்

‘இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 10 லட்சத்தை கடக்கும் என்றும், ஒரு நாளைக்கு ஐந்ததாயிரம் பேர் உயிரிழக்க நேரிடும்‘ என்றும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இவற்றைத் தொடர்ந்து, ‘நாடு தழுவிய ஊடரங்கை மீண்டும் அமல் படுத்த வேண்டும்‘ என்ற வலுவான கோரிக்கை எழுந்து வருகிறது. மத்திய அரசு தெரிவித்துள்ளபடி, நாட்டில் மொத்த கரோனா பாதிப்பில் 73 சதவீதம் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்தே பதிவாகியுள்ளன. அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ள 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நடைமுறையை கடுமையாக அமல் படுத்துவதற்கான அழுத்தத்தை இது தருகிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளையும் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னைகளையும் மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்.

ஹரியானாவும் ஒடிசாவும் தற்போது ஊரடங்கை அறிவித்துள்ளன. பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்து கடுமையான நடவடிக்கைகளைகளையும் அறிவித்துள்ளன. ஆனாலும் கூட பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பல நாடுகள் தங்கள் நாட்டுக்குள் வெளி நாட்டினர் யாரும் வர முடியாதபடி அரண் அமைத்துள்ளன, குறிப்பாக இந்தியாவில் இருந்து எவரும் வருவதை தடை செய்துள்ளன. தொற்று நோய் பரவும் சங்கிலியை துண்டிக்க, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து ஊரடங்கு அமல்படுத்துவதை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

மக்களின் உயிரைப் பாதுகாக்க நாடுதழுவிய ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்
மக்களின் உயிரைப் பாதுகாக்க நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

‘மக்களின் உயிரைப் பாதுகாக்க நாடுதழுவிய ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்‘ என்று உச்சநீதிமன்றமும் அண்மையில் கூறியது. ‘நாடுதழுவிய ஊரடங்கால் ஏற்படும் சமூக-பொருளாதார விளைவுகளை ஆராய்ந்து பராமரிக்கும் அதே வேளையில், ஏழைகளை பட்டினியிலிருந்து காப்பாற்றுவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்‘ என்று நீதிமன்றம் கோரியுள்ளது.

‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி!
‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி!

அமெரிக்காவின் சுகாதாரத்துறை வல்லுநர் ஆண்டனி ஃபாவ்சி, “நாட்டின் மருத்துவ மற்றும் சுகாதார முறை சரிந்துவிட்டதால், சில வாரங்களுக்கு நாடடங்கை அமல்படுத்த வேண்டும்“ என்று தெரிவித்துள்ளார். “சீனாவைப் போலவே போர்க்கால அடிப்படையில் கோவிட் மருத்துவமனைகளை இந்தியா அமைக்க வேண்டும்“ என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். “போதிய அளவில் ஆக்ஸிஜன், மருந்துகள் மற்றும் படுக்கைகள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்வதிலும் நாடு கவனம் செலுத்த வேண்டும்“ என்று அவர் கூறியுள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள
வெளிமாநில தொழிலாளர்கள்

பிரதமரால் நியமிக்கப்பட்ட கோவிட் பணிக்குழுவும் இதே போன்ற பரிந்துரைகளை செய்துள்ளதால், மக்களின் உயிரைக் காப்பாற்ற உடனடி முடிவுகளை எடுக்க வேண்டிய நேரமிது. ‘இந்தத் தொற்று நோயின் மூர்க்கம் குறைந்தது நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும்‘ என்று, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பு கருதுகிறது. அதனால், குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ஐ.சி.யூ படுக்கைகள், மூன்று லட்சம் செவிலியர்கள், இரண்டு லட்சம் இளநிலை மருத்துவர்கள் நாட்டிற்குத் தேவை என்று அது மதிப்பிட்டுள்ளது.

இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற

இந்திய தொழில்துறை கூட்டமைப்பும், கரோனா சோதனை முறைகளை மேம்படுத்துவதோடு, மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து தடுப்பூசி போடுதலையும் தீவிரப்படுத்த வேண்டும்‘ என்று வலியுறுத்தியுள்ளதோடு, நாடடங்கை அமல்படுத்தவும் ஆதரவளித்துள்ளது. நாடு எதிர்கொள்ளும், இதுவரை அனுபவித்திராத பேரழிவை திறம்பட கையாள்வதற்கு, மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான கண்ணோட்டத்துடன் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அந்த வகையில், கரோனா வைரஸால் ஏற்படும் பெரும் உயிழிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.