பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் மீண்டும் பூதாகரம் ஆகியுள்ளது.
இந்நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கு மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். பி.எஸ். எடியூரப்பா இன்று மல்லேஸ்வரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மேகதாது பகுதியில் அணை கட்டிக்கொள்ள தேசிய பசுமைத் தீர்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி உரிய அனுமதி வாங்கப்படும். அவ்வாறு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், மேகதாதுவில் அணை கட்டப்படும்.
முதல்கட்டமாக அங்கு 4 ஆயிரம் வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அங்கிருந்து குடிநீர் பெங்களூருவுக்கு கொண்டுவரப்படும். இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது, ஆகவே திட்டத்தை தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: எடியூரப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!