மும்பைக் கடற்படைத்தளத்தில் ஐஎன்எஸ் மொர்முகோவ் என்ற ஏவுகனைகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டப் போர்க்கப்பல் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில், இந்தியக் கடற்படையில் நேற்று (டிசம்பர் 18) இணைக்கப்பட்டது. பி15பி ஏவுகணை அழிப்பானைக் கொண்ட இந்தப் போர்க்கப்பல், கடற்படையின் போர்க்கப்பல் உற்பத்தி அமைப்பு மற்றும் மஸாகான் டாக் கப்பல் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
INS Mormugao (D67), 2nd warship of P15B class of stealth guided-missile destroyers, commissioned in august presence of Raksha Mantri Shri @rajnathsingh at Naval Dockyard, Mumbai today.
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read more here:https://t.co/b8Am7TNyaY pic.twitter.com/DJvw9leIdJ
">INS Mormugao (D67), 2nd warship of P15B class of stealth guided-missile destroyers, commissioned in august presence of Raksha Mantri Shri @rajnathsingh at Naval Dockyard, Mumbai today.
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) December 18, 2022
Read more here:https://t.co/b8Am7TNyaY pic.twitter.com/DJvw9leIdJINS Mormugao (D67), 2nd warship of P15B class of stealth guided-missile destroyers, commissioned in august presence of Raksha Mantri Shri @rajnathsingh at Naval Dockyard, Mumbai today.
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) December 18, 2022
Read more here:https://t.co/b8Am7TNyaY pic.twitter.com/DJvw9leIdJ
இந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், ஐஎன்எஸ் மொர்முகோவ் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிக சக்திவாய்ந்த போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல்பாதுகாப்பை உறுதிசெய்யும். ஐஎஸ்எஸ் மொர்முகோவ் , தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும், வல்லமை கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.
இந்திய ராணுவம் தற்சார்பு அடைவதற்கான முனைப்பில் இருப்பதற்கு உதாரணம். இந்த அதிநவீனப் போர்க்கப்பல் உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு பாராட்டுக்கள். இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. பொருளாதார வளர்ச்சி என்பது கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.
இந்தியா தற்போது, உலகின் சக்திவாய்ந்த 5ஆவது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலான மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், வன்முறைக்கு ரெட் கார்டு காட்டியுள்ளோம்" - பிரதமர் மோடி