ETV Bharat / bharat

20 நாட்களில் ரூ.187.17 கோடியிலான பொருட்கள் பறிமுதல் - கர்நாடகத் தேர்தலில் பரபரப்பு! - Karnataka election 2023 seized

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 20 நாட்களில் 187.17 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

20 நாட்களில் ரூ.187.17 கோடியிலான பொருட்கள் பறிமுதல் - கர்நாடக தேர்தலில் பரபரப்பு!

author img

By

Published : Apr 19, 2023, 10:17 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல், வருகிற மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பிரதானக் கட்சிகள் முதல் சுயேச்சைகள் வரை, அனைவரும் தங்களது சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தல் பணியில், தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல் துறையினரின் அதிரடி சோதனை மூலம், கடந்த 20 நாட்களில் 187.17 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை 187.17 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானங்கள், போதை மருந்துகள், தங்கம், வெள்ளி மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவை தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் மாநில காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவற்றில், 75.17 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 19.05 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பரிசுப் பொருட்கள், 40.93 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 9 லட்சத்து 82 ஆயிரத்து 756 லிட்டர் மதுபானம், 15.2 கோடி ரூபாய் மதிப்பிலான 908 கிலோ எடை உள்ள போதை மருந்துகள், 33.61 கோடி ரூபாய் மதிப்புடைய 75.30 கிலோ தங்கம் மற்றும் 3.21 கோடி ரூபாய் மதிப்புடைய 454.707 கிலோ எடை கொண்ட சில்வர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், ரொக்கப் பணம், மதுபானம், போதை மருந்துகள், மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் இலவச பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்ததன் அடிப்படையில் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் காவல் துறையினரால் ஆயிரத்து 550 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவித்த நாளில் இருந்து, மேற்குறிப்பிட்ட தேதி வரை 69 ஆயிரத்து 104 ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

18 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், 20 ஆயுதங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 253 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, 10 ஆயிரத்து 817 வெளியில் வர முடியாத வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 984 வழக்குகளை கலால் துறை பதிவு செய்துள்ளது. மதுபான உரிமம் மீறல் தொடர்பாக ஆயிரத்து 494 வழக்குகளும், என்டிபிஎஸ் மற்றும் கர்நாடக கலால் விதி 1965 பிரிவு 15 (A)இன் கீழ் 69 வழக்குகளும் என மொத்தமாக 10 ஆயிரத்து 193 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஆயிரத்து 338 பல்வேறு வகையான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் உள்ள ஹெப்பல் சட்டமன்றத் தொகுதியில் 67.54 லட்சம் மதிப்பிலான 1.448 கிலோ தங்கத்தை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல், 55.83 லட்சம் மதிப்புடைய 1.457 கிலோ தங்கத்தை சிக்காபேட் தொகுதியில் இருந்து வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதேநேரம், ஷாந்தி நகர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 4 கோடியே 79 லட்சத்து 64 ஆயிரத்து 24 ரூபாய் மதிப்புள்ள 7.999 கிலோ தங்கத்தை புலனாய்வு குழு பறிமுதல் செய்துள்ளது.

மேலும், பெங்களூரு மாவட்டத்தில் 30 லட்சம் ரூபாய், ராமநகரா சட்டமன்ற தொகுதியில் 1.97 கோடி ரூபாய் மற்றும் மஹாதேவ்பூர் சட்டமன்ற தொகுதியில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கப் பணத்தை நிலையான கண்காணிப்புக் குழு பறிமுதல் செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 185.74 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கப் பணம், மதுபானம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: Karnataka Election: காங்கிரஸ் டூ பாஜக.. பாஜக டூ..? நகரும் முக்கிய வேட்பாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.