கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் தீவிரமாகியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. தடுப்பூசி, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 216 கோடி ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவுக்கு வரவிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்புட்னிக் v தடுப்பூசி அடுத்த வாரம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வர காலதாமதமாவதால், 216 கோடி ஸ்புட்னிக் v தடுப்பூசி இந்தியாவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.