ETV Bharat / bharat

'காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்புகிறார்': அமித்ஷா மீது கர்நாடகாவில் போலீசில் புகார் - காங்கிரஸ் போலீசில் புகார்

கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் குறித்து அவதூறு பரப்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Congress complaint
காங்கிரஸ் புகார்
author img

By

Published : Apr 27, 2023, 6:37 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்மையில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், பரமேஸ்வர் ஆகியோர் ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "கடந்த 25ம் தேதி விஜயபுரா மற்றும் பிற பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர்கள் பரப்புரை செய்தனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் அமித்ஷா பேசினார். அவரது பேச்சு பொய்யான குற்றச்சாட்டுக்களுடன், மக்கள் மத்தியில் காங்கிரசுக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இருந்தது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், "காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத வன்முறை வெடிக்கும் என அமித்ஷா பேசியுள்ளார். மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார். எங்கள் மாநிலம் அமைதிப் பூங்காவாக உள்ளது. நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு, இப்படி பேசியிருக்கும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பரப்புரையில் பங்கேற்க தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். சட்டப்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது அவசியம்" என கூறினார்.

மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுர்ஜிவாலா கூறும்போது, "வகுப்புவாத கலவரத்தை பாஜக தூண்டிவிடுகிறது. பரப்புரையின் போது காங்கிரஸ் குறித்து தவறாக பேசுகின்றனர். அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: Reliance Capital : ரிலையன்ஸ் கேபிட்டலை விலைக்கு வாங்கும் இந்துஜா குழுமம்? அனில் அம்பானிக்கு அடிமேல் அடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.