டெல்லி : 2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டுகளுக்கான தேசிய இளைஞர் விருதுகளை, ஒன்றிய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், டெல்லி விஞ்ஞான் பவனில் நாளை (ஆக.12) வழங்குகிறார்.
முன்னதாக சர்வதேச இளைஞர் தினம் 2021-ஐ கொண்டாடும் வகையில், வேளாண் நிறுவனங்கள் நடத்திய சவால் போட்டியில் வெற்றி பெற்ற 10 இளம் தொழில் முனைவோர் குழுக்கள், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் நிஷித் பிரமனிக்கால் பாராட்டப்படுவார்கள்.
மொத்தம் 22 தேசிய இளைஞர் விருதுகள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 2017-18ஆம் ஆண்டு பிரிவுக்கு மொத்தம் 14 விருதுகள் வழங்கப்படும். இதில் 10 விருதுகள் தனிநபர்களுக்கும், 4 விருதுகள் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.
2018-19ம் ஆண்டு பிரிவில் 8 விருதுகள் வழங்கப்படும். இதில் 7 விருதுகள் தனிநபர்களுக்கும், 1 விருது நிறுவனத்துக்கும் வழங்கப்படும். இந்த விருதில், ஒரு பதக்கம், ரொக்கத் தொகை தனிநபருக்கு ரூ.1 லட்சம், நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும்.
வளர்ச்சி மற்றும் சமூக சேவை, சுகாதாரம், மனித உரிமைகள் மேம்பாடு, சமுதாய சேவை போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள் (15 முதல் 29 வயதுடையவர்கள்) மற்றும் நிறுவனங்களுக்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் தேசிய இளைஞர் விருதுகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிறப்பு எஃகு இரும்பு திட்டத்திற்கு ரூ.6,322 கோடி ஒதுக்கீடு - அனுராக் தாக்கூர்