ETV Bharat / bharat

பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு! - மேகாலயா விளையாட்டு துறை மறுப்பு

மேகாலயாவில் பிரதமர் மோடி, தனது தேர்தல் பேரணியை நடத்தவிருந்த இடத்திற்கு அம்மாநில விளையாட்டு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

மேகாலயாவில் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்கு மறுப்பு!

author img

By

Published : Feb 20, 2023, 11:23 AM IST

ஷில்லாங்: பிப்.27ஆம் தேதி அன்று, மேகாலயா சட்டப்பேரவைக்கு உள்பட்ட 60 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக, பிரதமர் மோடி வரும் 24ஆம் தேதி ஷில்லாங்கில் உள்ள துராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே சங்க்மாவின் சொந்த தொகுதியான தெற்கு துராவில் உள்ள பிஏ சங்க்மா அரங்கத்திற்கு மேகாலயா பாஜக அனுமதி கோரியது. ஆனால், பிரதமர் மோடியின் தேர்தல் பேரணிக்கு பிஏ சங்க்மா அரங்கத்தில் அனுமதி கிடையாது என அம்மாநில விளையாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் மேகாலயாவில் மோடியின் அலையை ஆளும் தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி சுவப்னில் டெம்பே கூறுகையில், "அனுமதி கோரப்பட்ட அரங்கத்தில் கட்டுமானப் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. கட்டுமானப் பணிகளுக்கான பொருட்களால் அரங்கம் முழுவதும் நிரம்பி உள்ளது. எனவே ஒரு தேர்தல் பேரணியை நடத்துவதற்கு பிஏ அரங்கம் உகந்தது அல்ல. இந்த அரங்கிற்கு பதிலாக அலோட்கிரே அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய பாஜக தேசிய செயலர் ரித்துராஜ் சின்ஹா, இரு மாதங்களுக்கு முன்பு கடந்த 2022 டிசம்பர் 16ஆம் தேதி முதலமைச்சர் சங்க்மாவால் 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்ட பிஏ அரங்கத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் பிரதமரின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது, கான்ராட் சங்க்மா மற்றும் முகுல் சங்க்மா ஆகியோருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், முதலமைச்சரால் பிரதமர் மோடியின் தேர்தல் பேரணியை வேண்டுமானால் நிறுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் மக்கள் மனதிலிருந்து பிரதமரை நீக்க முடியாது எனவும் ரித்துராஜ் சின்ஹா தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் அரசு குறித்து விமர்சிக்கும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை - முதன்மை செயலாளர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.