ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் புட்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்ரவாதிகளுக்கும், பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், சிறப்பு காவலர் ஒருவர் உயிரிழந்தார், மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க...சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்தது பசுமை தீர்ப்பாயம்