டெல்லி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இருக்கையில் "இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது" என்று இந்தியில் எழுத்தப்பட்டிருந்ததால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. ஜெய்சால்மரில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று (டிசம்பர் 26) டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.
இந்த விமான பயணிகள் இறங்கும் வேளையில், பெண் பயணி ஒருவர் விமானத்தின் இருக்கையில் "இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது" என்று இந்தியில் எழுத்தப்பட்டிருந்ததை கவனித்து அதிர்ச்சியடைந்தார். இந்த தகவலை சக பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் பீதியடைந்த பயணிகள் அவசரமாக வெளியேற முற்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த விமான நிலைய அலுவலர்கள் விமானத்துக்கு, விரைந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே டெல்லி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிகுண்டு செய்தி போலியானது என்பது தெரியவந்தது.
இருக்கையில் போலி மிரட்டலை எழுதியது யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி போலீசார் இறங்கினர். முதல்கட்ட தகவலில், மிரட்டல் எழுத்தப்பட்டிருந்த இருக்கையில் யாரும் பயணம் செய்யவில்லை என்பதும் வேறு இருக்கையில் இருந்துவந்த எழுதிவிட்டு சென்றிருக்க வேண்டும் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் 117 பயணிகள் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆந்திர மருந்து ஆலை தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு