ETV Bharat / bharat

பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு - BS Yeddiyurappa

மோசடி வழக்கில் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவு

author img

By

Published : Sep 15, 2022, 9:17 AM IST

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் என்பவர், சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் (பிடிஏ) வீட்டுத் திட்ட ஒப்பந்தத்தை வழங்குவதற்காக ராமலிங்கம் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து முன்னாள் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார்.

எனவே சட்ட விரோதமாக செயல்பட்ட பி.எஸ்.எடியூரப்பா, அவரது மகன் பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவரது மகள் பத்மாவதியின் உறவினர் சசிதர் மராடி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே மனுதாரரான ஆபிரகாம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம், “பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது அவரது குடும்பத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடுகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும். இந்த விசாரணையின் இறுதி அறிக்கையை நவம்பர் 2 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, விசாரணை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: எடியூரப்பா குற்றவியல் வழக்கு: உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.