ETV Bharat / bharat

தாய்மொழியில் பேச தயங்கிய பெண் எம்பி, உரையாற்ற ஊக்கமளித்த சபாநாயகர்... குவியும் பாராட்டு! - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா

மக்களவையில் உரையற்ற தயக்கம் காட்டிய ஒடிசா எம்பிக்கு தயக்கமின்றி பேச ஊக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

ஓம் பிர்லா, பிரமிலா பிசோயி
ஓம் பிர்லா
author img

By

Published : Dec 9, 2021, 8:10 PM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவையில் ஒடிசாவை சேர்ந்த பெண் உறுப்பினரை பேச சபாநாயகர் ஓம் பிர்லா ஊக்குவித்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான பிரமிலா பிசோயி என்ற அந்த பெண் உறுப்பினர் பிஜூ ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர். கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுவை சிறப்பாக முன்னடத்திய பிரமிலா முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

தனது தாய் மொழியான ஓடியா மொழியில் மட்டுமே பேச தெரிந்தவரான இவர் பெண்களிடம் நிலவும் வேலையின்மை பிரச்னை குறித்து இன்று உரையாற்றினார். கோவிட்-19 காரணமாக பெண்கள் அதிகளவில் வேலையிழந்ததாகவும், இன்னும் இவர்களுக்கு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரமிலா பேசி முடித்ததும், அவரது பேச்சை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நெகிழ்ந்து பாராட்டினார். ஆரம்பத்தில் பிரமிலா பேசுவதற்கு வெகுவாக தயக்கம் காட்டியதாகவும், தனது தொடர் ஊக்கத்தாலும் வலியுறுத்தலாலும் பிரமிலா தயக்கத்தை விட்டு பேசியுள்ளதாகவும் ஓம் பிர்லா கூறினார்.

இனிவரும் காலங்களிலும் பிரமிலா தொடர்ந்து பேச வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஓம் பிர்லா, இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வலிமை என்றும் கூறினார். மேலும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் பலருக்கு பிரமிலா வேலை வழங்கியுள்ளதை குறிப்பிட்டு பாராட்டினார்.

சபாநாயகரின் ஊக்கத்தையும், உறுப்பினரின் தன்னம்பிக்கையையும் போற்றி மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவையில் எழுந்து நின்று பாராட்டினார். இதற்கு அவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை வெகுவாகத் தட்டி வரவேற்றனர்.

மக்களவையில் அனைத்து உறுப்பினர்களையும் பேச வைக்க வேண்டும் என ஓம் பிர்லா கவனத்துடன் செயல்பட்டுவருகிறார். நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை 402 உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி தோழியை கரம் பிடித்தார் தேஜஸ்வி யாதவ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.