லக்னோ (உத்தரப்பிரதேசம்): சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை 'வருங்கால பிரதமர்' எனக் கூறி லக்னோவிலுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைமை அலுவலகத்தின் வெளியே கட்சி தொண்டர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
-
#बाराबंकी
— Danish Azad Ansari (@danishazadbjp) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
आज #बाराबंकी, उदवतनगर स्थित, दलथम्भन इंटर कॉलेज, के स्वर्ण जयन्ती समारोह के उपलक्ष्य में आयोजित संस्कृतिक कार्यक्रम में रहना हुआ। जहाँ मुख्यतः सदस्य विधान परिषद श्री #अंगद_कुमार_सिंह जी, तथा अन्य गणमान्यजन उपस्थित रहे। pic.twitter.com/YmyJJrSqNY
">#बाराबंकी
— Danish Azad Ansari (@danishazadbjp) October 22, 2023
आज #बाराबंकी, उदवतनगर स्थित, दलथम्भन इंटर कॉलेज, के स्वर्ण जयन्ती समारोह के उपलक्ष्य में आयोजित संस्कृतिक कार्यक्रम में रहना हुआ। जहाँ मुख्यतः सदस्य विधान परिषद श्री #अंगद_कुमार_सिंह जी, तथा अन्य गणमान्यजन उपस्थित रहे। pic.twitter.com/YmyJJrSqNY#बाराबंकी
— Danish Azad Ansari (@danishazadbjp) October 22, 2023
आज #बाराबंकी, उदवतनगर स्थित, दलथम्भन इंटर कॉलेज, के स्वर्ण जयन्ती समारोह के उपलक्ष्य में आयोजित संस्कृतिक कार्यक्रम में रहना हुआ। जहाँ मुख्यतः सदस्य विधान परिषद श्री #अंगद_कुमार_सिंह जी, तथा अन्य गणमान्यजन उपस्थित रहे। pic.twitter.com/YmyJJrSqNY
சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சாந்த் கூறும் போது, "அகிலேஷ் யாதவ் பிறந்தநாள் ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ஆனால், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த பலர் அகிலேஷின் பிறந்தநாளை தற்போது வரை கொண்டாடி வருகின்றனர். மேலும், அகிலேஷ் யாதவ் நாட்டின் பிரதமராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்" எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: "கெளதமி பாஜகவில் இருந்ததால் புகார் எடுக்கவில்லை.. விலகியதும் எடுத்துக் கொண்டார்கள்" - வானதி ஸ்ரீனிவாசன்!
இந்த நிலையில், அகிலேஷ் யாதவை 'வருங்கால பிரதமர்' எனச் சித்தரிக்கும் சுவரொட்டிகள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியை உத்தரப்பிரதேச பா.ஜ.க அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி நேற்று (அக்.22) ஞாயிற்றுக்கிழமை கூறும் போது, சமாஜ்வாடி கட்சி பகல் கனவு காண்பதாகவும், நாட்டு மக்கள் பிரதமர் மோடியை நம்புவதாகவும், மூன்றாவது முறையாகவும் பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Gaganyaan TV D1: ககன்யான் விண்கலம் எடுத்த வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ!
மேலும், 'Mungeri Lal Ke Haseen Sapne' என்ற பழமொழி உண்டு. பகல் கனவு காண்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், தனது திறமையை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் கனவு காண வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. நாட்டு மக்கள் பிரதமர் மோடியை நம்புகின்றனர். மூன்றாவது முறையாகப் பிரதமராக மோடியை நாடு நிச்சயம் தேர்வு செய்யும் எனத் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளில் உள்ளார். I.N.D.I.A கூட்டணி 28 எதிர்க்கட்சிகளை ஒன்று இணைந்த கூட்டணியாகும். I.N.D.I.A கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. I.N.D.I.A கூட்டணி இதுவரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! - காரணம் என்ன?