திருப்பதி: நாட்டில் மாநிலங்களுக்கிடையே உள்ள சச்சரவுகளைக் களைப்பதற்கும், சுமுகமான உறவை ஏற்படுத்துவதற்கும் ஆலோசனைகள் வழங்குவதற்கு மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதன் 29ஆவது கவுன்சில் கூட்டம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறகிறது. இதில் தென் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பர்.
அதன்படி, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்பாடு செய்துள்ள இந்தத் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் - புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: நாட்டின் இறையாண்மையில் தலையிட்டால் உங்கள் மொழியிலேயே பதிலடி- அமித் ஷா