டெல்லியின் சாதிக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பள்ளியின் இமெயில் முகவரிக்கு இன்று (நவம்பர் 28) மிரட்டல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரையும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும்படி அறிவுறுத்தினர். இதனிடையே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவுடன் சம்பவயிடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தி போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் தரப்பில், இது ஒரு பொய்யான தகவலை கொண்ட இமெயில். இதனை அனுப்பிவர்களை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இமெயில் முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் அந்த இமெயில் எங்கிருந்து வந்தது. யார் அனுப்பியது என்பது குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிகாரில் பக்தர்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் 9 பேர் கவலைக்கிடம்