நாடு முழுவதும் கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுட்டு வருகிறது. இதை மத்திய அரசு கொள்ளை நோயாக அறிவித்துள்ள நிலையில், நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”மியூகோர்மைகோஸிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கான சிகிச்சை மருந்தை தேவையான அளவிற்கு உற்பத்தி செய்து, அரசு விநியோகம் செய்யவேண்டும். பல்வேறு இடங்களில் மருந்துக்கான தடுப்பாடு உள்ளது கவலை அளிக்கிறது.
மேலும், இந்த நோய் பாதிப்பில் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும். பாதிப்புக்குள்ளனர்களின் சிகிச்சை இதுவரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலோ அல்லது மற்ற சுகாதாரக் காப்பீடு திட்டத்திலோ சேர்க்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பெண் ஊழியர்களால் இயங்கும் முன்மாதிரி அஞ்சலகம்!