ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை - பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு - பிரஷாந்த் கிஷோர்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Sonia
Sonia
author img

By

Published : Apr 16, 2022, 7:35 PM IST

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜூன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரசில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தேர்தல் வியூகம் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிரமாக செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத் தேர்தலில் ஆம்ஆத்மியும் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் ஆம்ஆத்மியிடம் தோல்வியடைந்ததால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தின் முடிவில், 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்லில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை பிரஷாந்த் கிஷோர் சமர்ப்பித்துள்ளார். இந்த வியூகங்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாப்பாட்டில் உப்பு அதிகம் - மனைவியை கொன்ற கணவர்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.