பந்தா : உத்தர பிரதேச மாநிலம் நைரனி கொத்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ராமநந்தி. இரு மகன்களுடன் வசித்து வந்து உள்ளார். ராமநந்தியின் மூத்த மகன் ராம்பாபு மன நலன்குன்றியவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ராம்பாபு, திடீரென கண் விழித்து கீழே கிடந்த குச்சியால் தன் தாயை பலமாக தாக்கி உள்ளார்.
மகனின் திடீர் விசித்திர செயலால் மிரண்டு போன ராமநந்தி, சுதாரித்து கொண்டு எழுவதற்குள் ராம்பாபு குச்சியால் கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் தலையில் விழுந்த பலத்த அடியால் ராம்நந்தி மயங்கி விழுந்தார். ரத்த வெள்ளத்தில் தாய் கிடப்பதை கண்ட மற்றொரு மகன் ஷியாம் பாபு, போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமநந்தி மற்றும் ஹியாம்பாபு ஆகியோரை மீட்டனர். இதில் ராமநந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். ஷியாம் பாபு அளித்த புகாரில் அடிப்படையில் ராம்பாபுவை, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையின் போது ராம்பாபு பிதற்றும் வகையில் பேசியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தன் கனவில் கடவுள் மகாதேவர் தோன்றியதாகவும், தன்னை நாகேஸ்வரரின் அவதாரம் என்று கூறியதாகவும், இந்த பிறப்பில் தான் ஒரு பெண்ணை கொலை செய்ய வேண்டும் என கடவுள் கனவில் கூறியதாக ராம்பாபு தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
கனவில் கடவுள் கூறியதை அடுத்து தாய் என்றும் பாராமல் ராம்பாபு இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசார் கூறினர். மேலும் ராம்பாபுவை சிறையில் அடைத்த போலீசார், அவரது மன நிலை குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : CSK Vs GT: கூல் கேப்டனின் அதிரடி சாதனைகள்.. இவ்வளவா?