கர்நாடகா மாநிலம், இஸ்மாயில் கான்பேட்டாவைச் சேர்ந்தவர் பல்பானுரி ரேணுகா(49). இவருடைய இரண்டாவது மகன் ராகேஷ். திருமணம் செய்வதற்காக, அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தார்.
ராகேஷூக்கு வருகிற ஜூன் மாதம் 6ஆம் தேதி, நிச்சயதார்த்தத்தையும், 21ஆம் தேதி திருமணமும் நடத்த திட்டமிட்டுயிருந்தனர்.
இந்தநிலையில், அண்மையில் ரேணுகாவுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார்.
தாயின் மரணத்தால் மனமுடைந்த ராகேஷ், தனது திருமணம் தாயாரின் முன்னிலையில் நடக்க வேண்டும் எனத் தீர்மானித்தார். அதனால், ரேணுகவின் உடல் முன்பு, மணமகளுடன் மாலை மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொண்டார். இதனைக் கண்ட கிராமத்தினர் கண்ணீரில் மூழ்கினர்.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து: வரும் வாரம் முதல் 1,200 ரூபாய்க்கு விற்பனை