உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கமலா நகரில் ஒரு மூதாட்டிக்கு கரோனா தொற்று இருக்கும் என அஞ்சி அவரது ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மூதாட்டியின் கணவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கிற்கு சென்று வந்த அந்த மூதாட்டியை அவரது ஒரே மகனான ராகேஷ் அகர்வால் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டியுள்ளார். பின்னர் ராகேஷ் அவரது மனைவி, குழந்தைகள் என அனைவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனை அறிந்த அந்த மூதாட்டியின் பேரன் அனுப் கார்க், பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து மூதாட்டியை மீட்டுள்ளார். பின்னர் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் கேட்டபோது, மருத்துவ சிகிச்சையின் அலட்சியம் காரணமாக என் கணவர் இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கிறகு சென்று வந்ததால் என் மகன் என்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டான் என தெரிவித்தார்.
அந்த மூதாட்டிக்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவரது மகன் அந்த மூதாட்டியை அறைக்குள் அடைத்துவிட்டு, உணவு தராமல் கொடுமை படுத்தியுள்ளார். வெளியே மீட்டெடுக்கப்பட்ட பின்னர் அவருக்கு உள்ளூர் வாசிகள் உணவு, தண்ணீர் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொன்ற வழக்கறிஞர் தற்கொலை!