பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முதோலா பகுதியை சேர்ந்தவர் பரசுராம் குலாலி (54). இவருக்கு விட்டல் குலாலி (20) என்ற மகன் உள்ளார். பரசுராம் மதுபழக்கத்துக்கு அடிமையாகியிருந்தாகவும், தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்று தரகாறில் ஈடுபட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி பரசுராம் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, பரசுராமனுக்கும் மகன் விட்டலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தாகராறில் கோபமடைந்த விட்டல் கட்டையால் தாக்கி பரசுராமை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரது உடலை முதோலாவில் உள்ள சொந்த தோட்டத்துக்கு எடுத்துச் சென்றார். அதன்பின் உடலை 30-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசியுள்ளார். இதற்காக பயன்படுத்திய கோடாரியையும் ஆழ்துளை கிணற்றிலேயே வீசியுள்ளார்.
நாளடைவில், ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விட்டலிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலை சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்து விட்டல் கைது செய்யப்பட்டார். ஜேசிபி மூலம் ஆழ்துளை கிணற்றில் இருந்து உடல் உறுப்புகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் பேருந்தில் இருந்து குதித்த நபர் உயிரிழப்பு