திரிசூர்: கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சகுந்த் பகுதியை சேர்ந்தவர் குட்டன்(60). அவரது மனைவி சந்திரிகா (55). இவர்களது மகன் அனிஷ்(30). இன்று (ஏப். 10) காலை 10 மணி அளவில் குட்டன்-சந்திரிகா இருவரும் வீட்டின் முன்பு உள்ள சாலை ஓரமாக புல் அறுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்குவந்த அனிஷ் தான் வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதையடுத்து அனிஷ் தாமாகவே போலீசாரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, பைக்கில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவயிடத்திற்கு விரைந்த திரிசூர் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அனிஷை தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அதிர்ச்சி வீடியோ: மீதி சில்லறை கேட்ட மதுபிரியர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல்