ETV Bharat / bharat

பல் முளைக்கும் காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளும், தீர்வுகளும் - குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்

பல் முளைக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு ஈறுகளில் பிரச்னை ஏற்படுகிறது. சில நேரங்களில் காய்ச்சலுக்கும் வழிவகுக்கிறது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்து காண்போம்.

குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவம்
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் பருவம்
author img

By

Published : Feb 26, 2023, 6:37 PM IST

Updated : Mar 1, 2023, 1:46 PM IST

பொதுவாக குழந்தைகளுக்கு பிறந்ததில் இருந்து 5 முதல் 6 மாதங்களில் பற்கள் முளைக்கத் தொடங்கும். அந்த நேரத்தில் ஈறுகளில் வலி ஏற்படும். இது பெரும்பாலான குழந்தைகளுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்தும். இந்த பிரச்னைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க, சில வழிமுறைகளை கூறுகின்றனர் மருத்துவர்கள்.

இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் டி.எஸ்.ராவ் கூறுகையில், "பல்முளைக்கும் காலம் பொதுவாக குழந்தைகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். எனினும் ஒருசில குழந்தைகள் மட்டும் சாதாரண பிரச்னைகளை சந்திக்க நேரிடும். பல் முளைக்க தொடங்கும் காலத்தில், ஈறுகளில் அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படும். அதே நேரம் ஈறுகளை கிழித்துக் கொண்டு பற்கள் உடனடியாக வருவதில்லை. அதற்கு சில நாட்கள் பிடிக்கும். இதுபோன்ற நேரங்களில் காதுகளுடன் இணைந்திருக்கும் தசைகளில் வலியை ஏற்படுத்தும்.

ஒருசில குழந்தைகளுக்கு இதனால் காய்ச்சல் ஏற்படலாம். வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் உருவாகும். பல் முளைக்க தொடங்கிய பின், குழந்தைகள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கடிப்பதால், பாக்டீரியா தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எனவே இதுபோன்ற நேரங்களில் குழந்தைகளுக்கு பெற்றோர் தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகளின் கைகளை அவ்வப்போது சுத்தப்படுத்துவது அவசியம்.

சாப்பிடுவதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை கொடுக்கும் போது அவற்றை சுத்தமான தண்ணீரில் கழுவி கொடுக்க வேண்டும். பல் முளைக்கும் போது ஈறுகளில் வலி இருக்கும் என்பதால் கைவிரல் அல்லது ஈரமான துணியால், ஈறுகளை லேசாக அழுத்த வேண்டும். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு சோறு வடித்த தண்ணீர், பழச்சாறு, இளநீர், காய்கறி சூப் ஆகியவற்றை கொடுக்கலாம். இத்துடன் சீரான இடைவெளியில் குடிநீரும் கொடுத்தால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்" என கூறினார்.

இதையும் படிங்க: சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

Last Updated : Mar 1, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.