லண்டனைச் சேர்ந்த சென்டென்ஸ்கோ ஆராய்ச்சியாளர்கள், சிலந்தியின் சில வகைகளை சேகரித்து ஸ்லோ மோஷனில் அவற்றின் நடமாட்டத்தைப் படம்பிடிக்க முடிவு செய்தனர். இந்நிலையில், அவர்களது ஆய்வில் சிலந்திகளைக் குறித்த விநோதத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ஆய்வுக்காக சேகரித்த சிலந்திகளில் சில இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன. அப்போது, ஆண் சிலந்தி முதலில் பெண் சிலந்தியின் கால்களைக் கட்டிப்போடுகிறது. தொடர்ந்து நகர முடியாமல் தவிக்கும் பெண் சிலந்தியுடன், ஆண் சிலந்தி இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
சராசரியாக சுமார் 19 நிமிடங்கள் பெண் சிலந்தியுடன் ஆண் இனப்பெருக்கம் செய்கிறது. இந்த இனப்பெருக்க முறை விநோதமாக இருந்தாலும், பெண்ணிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஆண் சிலந்திகள் இதனை செய்தே வேண்டும். இல்லையென்றால், இனப்பெருக்கத்தின்போது பெண் சிலந்திகள் ஆணைத் தனது உணவாக்கி உண்டுவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆய்வில், சில பெரிய பெண் சிலந்திகள், ஆண் சிலந்திகளை சாப்பிடுவதும் உறுதியானது.
பெண் சிலந்திகள் சிறிது நேரம் மட்டுமே ஆண் சிலந்திகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். எளிதாக ஆணின் கட்டிப்பாட்டிலிருந்து தப்பிக்கும் திறனை அவை கொண்டுள்ளன. ஆண் சிலந்தி வெளியிடும் வலையில் உள்ள ஒரு வித ரசாயன ஈர்ப்பினால் கவரப்பட்டால், தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட ஆண் சிலந்தியை பெண் அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.