பிகார் தலைநகர் பாட்னாவில் ஜனவரி 12ஆம் தேதி இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவன மேலாளர் ரூபேஷ் குமார் சிங், அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில், ரித்துராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு சாலை விபத்தின் போது ஏற்பட்ட தகராறுக்கு பழிவாங்குவதற்காக ரூபேஷ் சிங்கை ரித்துராஜ் கொலை செய்ததாகக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்று ரூபேஷ் சிங்கின் மனைவி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். விரைவில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவில் பழங்குடியினரைக் கொன்ற மாவோயிஸ்டுகள்!