ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று (பிப். 20) தனது வீட்டை விட்டு வெளியேறி, காக்கிநாடா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர், மும்பைக்கு டிக்கெட் வாங்கியுள்ளார்.
இது குறித்து அறிந்த ரயில்வே காவல் துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், தான் நடிகையாக வேண்டும் என்பதற்காக மும்பை செல்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சிறுமி வைத்திருந்த பையில் ஒன்றரை லட்சம் ரூபாய் இருந்ததையும் பார்த்தனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க...பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர்!