பாட்னா: பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், பயங்கரவாதிகள் இயக்கம் ஒன்றை போலீசார் அண்மையில் கண்டுபிடித்தனர்.
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என்றும், அதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் சோதனை நடத்தியதில், ஏராளமான துண்டு பிரசுரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கிடைத்தன.
கடந்த வாரம் பிரதமர் மோடி பிகார் சென்றிருந்தபோது, அவரை கொல்ல இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிகிறது. இந்த இயக்கத்தை ஒழிக்க போலீசார் தீவிரமாக களமிறங்கிய நிலையில், கடந்த 11ஆம் தேதி இருவரை கைது செய்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த இயக்கத்தைச் சேர்ந்த மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இயக்கத்தில் தொடர்புடைய முகமது ஜலாலுதீன், அதர் பர்வேஸ், அர்மான் மாலிக், தாஹிர் அகமது, ஷபீர் மாலிக், ஷமிம் அக்தர் ஆகிய 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 20 பேரைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த இயக்கத்தில், வணிகர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் ஆகியோரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடான எண்ணெய் ஊற்றிய வளர்ப்புத்தாய் கைது