குடிபோதையில் வீட்டைக் கொளுத்திய நபர் - 6 பேர் உயிரிழப்பு - misdemeanor
பெங்களூரு: கோடகில் குடிபோதையிலிருந்த நபர், வீட்டைப் பூட்டிவிட்டு தீ வைத்ததில், ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம் கோடகு மாவட்டத்தில் கனூரு கிராமத்தில் மதுபோதையிலிருந்த நபர் ஒருவர், ஒரு வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தீ வைத்துள்ளார். இதில் வீட்டிலிருந்த எட்டு பேரில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிபோதையிலிருந்த நபர் எரவரா போஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொன்னம்பேட்டே காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். குடிபோதையிலிருந்த நபரின் தவறால், ஆறு பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டியூஷன் சென்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை?